×

அமெரிக்க கறுப்பர் கொலை வழக்கு; போலீஸ் அதிகாரிக்கு 21 ஆண்டு சிறை

வாஷிங்டன்: அமெரிக்க கறுப்பரான ஜார்ஜ் பிலாய்டின் மரணம் தொடர்பாக அமெரிக்க முன்னாள் போலீஸ் அதிகாரி டெரெக் சோவினுக்கு 21 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மினசோட்டா மாகாணம், மினியாபொலிஸ் நகரில் கடந்த 2020ம் ஆண்டு மே மாதம் 25ம் தேதி ஜார்ஜ் பிளாய்ட்(46) என்ற கறுப்பினத்தைச் சேர்ந்தவரை போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் மடக்கிப் பிடித்தனர். அப்போது, டெரெக் சாவின் (44) என்ற போலீஸ் அதிகாரி, பிளாய்டை கீழே தள்ளி அவரது கழுத்தில் காலை வைத்து பலமாக அழுத்தி கொன்றார். இந்த படுகொலை சம்பவம் அமெரிக்கா மட்டுமின் உலகம் முழுவதையும் உலுக்கியது. காவல்துறையின் இனவெறி மற்றும் காட்டுமிராண்டித்தனமான முகத்தை அம்பலப்படுத்தியதற்கு எதிராக அமெரிக்கா முழுவதும் போராட்டம் நடைபெற்றது. தொடர்ந்து ஆட்சி மாற்றங்கள் நடந்தன. இவ்வழக்கை விசாரித்த அமெரிக்க நீதித்துறை, முன்னாள் போலீஸ் அதிகாரி டெரெ சாவினுக்கு 21 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. ஏற்கனவே டெரெக் சாவின் மற்றொரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார். அந்த வழக்கு தொடர்பாக 22 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். தற்போது இரு தண்டனைகளும் சேர்த்து அனுபவிப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன….

The post அமெரிக்க கறுப்பர் கொலை வழக்கு; போலீஸ் அதிகாரிக்கு 21 ஆண்டு சிறை appeared first on Dinakaran.

Tags : Washington ,Derek Sovin ,George Floyd ,Dinakaran ,
× RELATED தைவானில் இருந்து அமெரிக்கா சென்ற...